ADDED : ஆக 14, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தாராபுரம், அலங்கியம் அமராவதி ஆற்றில், நாச்சிமுத்து என்பவரின் அஸ்தியை கரைப்பதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் சென்றனர். அப்போது, திடீரென காற்றுக்கு மரத்தில் கட்டப்பட்டிருந்த தேன்கூடு கலைந்தது.
அங்கிருந்த வர்களை தேனீக்கள் கொட்டின. அதில், அலங்கியத்தை சேர்ந்த ராசாத்தி, 50, புவனேஸ்வரி, 45, நாட்டுதுரை, 55, சதாசிவம், 62, செந்தில், 40 உள்ளிட்ட, பத்து பேரை கொட்டியது. காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.