/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரத்த தான முகாமில் 100 யூனிட் சேகரிப்பு
/
ரத்த தான முகாமில் 100 யூனிட் சேகரிப்பு
ADDED : செப் 01, 2025 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை, களம் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் மாவட்ட இரண்டு சக்கர வாகன ஆலோசகர் நலச்சங்கம் ஆகியோர் இணைந்து, 12வது ரத்த தான முகாமை நடத்தினர்.
முகாமில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக, 100 யூனிட் ரத்தம், ரத்த தான கொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டது.
ரத்த கொடையாளர்களுக்கு நெகிழி பயன்பாட்டை தவிர்த்து இயற்கையை காக்க விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'துணிப்பை துாக்க துணிவோம்' என்ற வாசகத்துடன் துணிப்பை கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.