/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோருக்கு விளையாட்டு
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோருக்கு விளையாட்டு
ADDED : செப் 01, 2025 10:53 PM

திருப்பூர்; திருப்பூர் கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில், பெற்றோருக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்த விளையாட்டு திருவிழாவில், கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள், பெற்றோர் என, நுாறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கிட்ஸ் கிளப் குழும தலைவர் மோகன் கார்த்திக், கொடியசைத்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி விளையாட்டு, எறிபந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம் பெற்றன. போட்டிகளில், பெற்றோர், தங்களுக்கான அணிகளில் விளையாடினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் இடம் பெற்றிருந்த பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.