/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 ஆயிரம் பேரு உட்கார்ந்து பார்க்கலாங்க... பிப்., 9ல் அலகுமலையில் ஜல்லிக்கட்டு
/
10 ஆயிரம் பேரு உட்கார்ந்து பார்க்கலாங்க... பிப்., 9ல் அலகுமலையில் ஜல்லிக்கட்டு
10 ஆயிரம் பேரு உட்கார்ந்து பார்க்கலாங்க... பிப்., 9ல் அலகுமலையில் ஜல்லிக்கட்டு
10 ஆயிரம் பேரு உட்கார்ந்து பார்க்கலாங்க... பிப்., 9ல் அலகுமலையில் ஜல்லிக்கட்டு
ADDED : ஜன 04, 2025 12:43 AM

திருப்பூர்; அலகுமலையில், பிப்., 9ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க, தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென, ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. திருப்பூர் தெற்கு தாலுகாவில் உள்ள அலகுமலையில், தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை, ஆண்டுதோறும் நடத்த, காளைகள் நல சங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்காக, ஜல்லிக்கட்டு நடத்த, அனுமதி வழங்க வேண்டுமென, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில்,' அலகுமலையில், ஜல்லிக்கட்டு விழா, பிப்., 9ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். அலகுமலை கிராமத்தில் உள்ள, க.ச., எண் 36/1, 37/1 ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், 2025ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடத்த, முழுமையான அனுமதி வழங்கி, விழா ஏறபாடுகளை சிறப்பாக மேற்கொள்ள உதவிட வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க, இளைஞர் அணி தலைவர் கவுரிசங்கர் கூறுகையில், ''கடந்த, 2018 முதல், அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும், தமிழகம் முழுவதும் இருந்து, 800 காளைகள் வரை பங்கேற்கின்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 600க்கும் அதிகமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 200 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன.
இந்தாண்டும், விமரிசையாக நடத்த அனுமதி கேட்டிருக்கிறோம். மொத்தம், 10 ஆயிரம் பார்வையாளர் அமர்ந்து பார்க்கும் 'கேலரி' மற்றும் அடிப்படை வசதிகளுடன், இந்தாண்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடத்தப்படும்,'' என்றார்.