ADDED : பிப் 08, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : நேற்று மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, குமரானந்தபுரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டது குறித்து, திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக விசாரித்த போலீசார், பனியன் தொழிலாளியான குமரானந்தபுரத்தை சேர்ந்த வினோத், 34 என்பவரை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, பத்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தேனியில் இருந்து கொண்டு வரப்பட்ட பொட்டலம், வேறு ஒரு நபர் மூலமாக விற்பனைக்கு இவருக்குமாற்றி விடப்பட்டது தெரிந்தது.
இதில், தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

