/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
11 எஸ்.ஐ.கள் மாற்றம் மாவட்டத்தில் அதிரடி
/
11 எஸ்.ஐ.கள் மாற்றம் மாவட்டத்தில் அதிரடி
ADDED : டிச 05, 2025 08:27 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த, 11 எஸ்.ஐ. களை, மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்து திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
அவிநாசி ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.ஐ. அமல் ஆரோக்கிய தாஸ் பல்லடத்துக்கும், சேவூர் துரைசாமி காங்கயத்துக்கும், உடுமலை உமாமகேஸ்வரி மடத்துக்குளத்துக்கும், ஊத்துக்குளி ரமேஸ்வரன் தளிக்கும், பல்லடம் கோவிந்தராஜன் உடுமலைக்கும், தளி முத்துக்குமார் பல்லடத்துக்கும், தாராபுரம் சிவராஜ் அலங்கியத்துக்கும், அங்கிருந்த அனந்தகிருஷ்ணன் வெள்ளகோவிலுக்கும், தனிப்பிரிவு அன்பரசன் அவிநாசிக்கும், காங்கயம் கபில்தேவ் ஊத்துக்குளிக்கும், அங்கிருந்த ஷாஜகான் சேவூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

