/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவித்தொகை வருகிறதா; கேட்டறிந்த கலெக்டர்
/
உதவித்தொகை வருகிறதா; கேட்டறிந்த கலெக்டர்
ADDED : டிச 05, 2025 08:26 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) லோகநாதன் வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் பூங்கொடி, அழகேசன் ஒருங்கிணைத்தனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியரின் பெற்றோரிடம், 'உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வங்கி கணக்குக்கு வந்து விடுகிறதா? இல்லை யென்றால் என்னிடம் வந்து சொல்லுங்கள். உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும்,' என, உறுதியளித்தார். முகாமில், 95 பேர் பங்கேற்றனர். வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் அலிமாபீவி நன்றி கூறினார்.
வரும், 10ம் தேதி, திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் உள்ள, தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் நடைபெறும்.

