/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீச்சலில் 110 பதக்கங்கள்; 'பெம்' பள்ளி சாதனை
/
நீச்சலில் 110 பதக்கங்கள்; 'பெம்' பள்ளி சாதனை
ADDED : டிச 21, 2024 06:32 AM

திருப்பூர்; திருப்பூர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான 'சகோதயா' நீச்சல் போட்டி, பவானியில் உள்ள 'தி ஆப்டிமஸ் பப்ளிக் பள்ளி'யில் நடந்தது. 17 பள்ளிகளைச் சேர்ந்த 285 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், திருப்பூர், 'பெம்' பள்ளியில் இருந்து 42 மாணவ, மாணவியர் பங்கேற்று, 57 தங்கம், 20 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 110 பதக்கங்களை வென்றனர்.
சகோதயா நீச்சல் போட்டியில் அதிகப் பதக்கங்களை வென்ற பள்ளி என்ற சாதனையை 'பெம்' பள்ளி படைத்தது.
பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் அதிக நேரம் பயிற்சி பெற்றதாலேயே நிறைய பதக்கங்களை மாணவர்கள் வெல்ல முடிந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், பயிற்சியளித்த ஆசிரியர்கள் லதா, சரவணன் ஆகியோரை, பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிச்சாமி, இணைச்செயலாளர் சரண்யா, மூத்த முதல்வர் கவுசல்யாராஜன், முதல்வர் விஜய் கார்த்திக் ஆகியோர் பாராட்டினர்.