/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2024ல் ரயிலில் அடிபட்டு 112 பேர் உயிரிழப்பு
/
2024ல் ரயிலில் அடிபட்டு 112 பேர் உயிரிழப்பு
ADDED : ஜன 12, 2025 11:48 PM

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, பகுதியில் 2024 ஜனவரி முதல் டிச., வரை ரயிலில் அடிபட்டு, 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில், 16 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் அப்படியே உள்ளது. இவர்களில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, 102 பேரும், ரயில் முன் பாய்ந்து, பத்து பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரயில்வே போலீசார் கூறியதாவது:
ரயில் தண்டவாளத்தை மக்கள் கடந்து செல்வதை தடுக்க, அதிகளவு மக்கள் வசிக்கும், தண்டவாளத்தை கடந்து செல்லும் பகுதிகளை கண்டறிந்து அவ்விடங்களில் தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. தண்டவாளத்தை யாரும் கடந்து செல்லக்கூடாது என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ரயில் முன் பாய்ந்து அதிகளவில் தற்கொலை நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.