/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
12 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 2 பேர் கைது
/
12 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 2 பேர் கைது
ADDED : டிச 09, 2024 11:51 PM
அனுப்பர்பாளையம்; அனுப்பர்பாளையம் - விக்னேஸ்வரா நகர் பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதியினர் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார், 29, என்பவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான போயம்பாளையத்தை சேர்ந்த அஸ்வின், சூர்யா, ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
அதுபோல், திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட வாரணாசிபாளையம் பிரிவு, தாய் மூகாம்பிகை நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த வசந்தா, 50, என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து, விற்பனைக்காக வைத்திருந்த ஆறு கிலோ கஞ்சா மற்றும் விற்பனை செய்ய பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.