/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அறங்காவலர் குழு தேர்வு ஐந்து பதவிக்கு 13 பேர் போட்டி
/
மாவட்ட அறங்காவலர் குழு தேர்வு ஐந்து பதவிக்கு 13 பேர் போட்டி
மாவட்ட அறங்காவலர் குழு தேர்வு ஐந்து பதவிக்கு 13 பேர் போட்டி
மாவட்ட அறங்காவலர் குழு தேர்வு ஐந்து பதவிக்கு 13 பேர் போட்டி
ADDED : மார் 26, 2025 11:25 PM
திருப்பூர்; ஹிந்து சமய அறநிலையத்துறையின், திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு, 13 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களை பராமரிக்க, அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். தனிநபர், மூன்று மற்றும் ஐந்து அறங்காவலர் என்று, கோவிலின் வருவாய்க்கு ஏற்ப நியமனம் நடந்து வருகிறது. நியமிக்கப்படும் அறங்காவலர், அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்து பணியாற்றுகின்றனர்.
கோவில் அறங்காவலர்களை நியமனம் செய்வதற்காக, அரசு சார்பில், மாவட்ட அறங்காவலர் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவினர், விண்ணப்பத்தை பரிசீலித்து, அறங்காவலர் நியமனத்துக்கான பரிந்துரையை வழங்குகின்றனர். மாவட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்த, மாவட்ட குழு பதவிக்காலம் 2025 பிப்., 9ம் தேதியுடன் நிறைவடைந்தது.
அவ்வகையில், மாவட்டத்தில், 50 சதவீத கோவில்களுக்கும் குறைவாகத்தான் அறங்காவலர் நியமனம் நடந்துள்ளது. எனவே, மீண்டும் மாவட்ட அறங்காவலர் குழு நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பம் பெறப்பட்டது. அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'திருப்பூர் ஆய்வாளர் அலுவலகத்தில் ஏழு பேர் விண்ணப்பித்துள்ளனர். பல்லடத்தில், நான்கு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆய்வாளர் அலுவலகத்தில், தலா ஒன்று என, மொத்தம், 13 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம், சரிபார்க்கப்பட்டு, அவர்களில் இருந்து, ஐந்து பேர் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவர். அவர்கள் பொறுப்பேற்ற பின், அவர்களுக்குள் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார். மாவட்ட குழு, கோவில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்யும் பணியை மேற்கொள்ளும்,' என்றனர்.