/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய சிலம்பப் போட்டியில் கிடைத்தது 13 தங்கப்பதக்கம்
/
தேசிய சிலம்பப் போட்டியில் கிடைத்தது 13 தங்கப்பதக்கம்
தேசிய சிலம்பப் போட்டியில் கிடைத்தது 13 தங்கப்பதக்கம்
தேசிய சிலம்பப் போட்டியில் கிடைத்தது 13 தங்கப்பதக்கம்
ADDED : பிப் 03, 2025 11:45 PM
உடுமலை; தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில், உடுமலை, மடத்துக்குளத்தைச்சேர்ந்த வீரர்கள், 13 தங்கப்பதக்கங்களை பெற்றனர்.
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில், தேசிய அளவிலான சிலம்ப போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. இதில், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட 16க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் உடுமலை அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில், இரட்டை கம்பு வீச்சு, கம்பு சண்டை, குத்து வரிசை, ஆயுதக்கோர்வை, ஒற்றை சுருள் வால் வீச்சு உட்பட பல்வேறு போட்டிகளில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் பங்கேற்றனர்.
போட்டிகளில் 13 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்து மார்ச் 6ம்தேதி முதல் 9ம்தேதி வரை, இலங்கையில் நடக்க உள்ள இரண்டாவது ஆசிய சிலம்பப் போட்டியில் பங்கேற்கின்றனர்.

