/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியுடன் இணையும் 14 ஊராட்சிகள்: சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
/
நகராட்சியுடன் இணையும் 14 ஊராட்சிகள்: சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நகராட்சியுடன் இணையும் 14 ஊராட்சிகள்: சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நகராட்சியுடன் இணையும் 14 ஊராட்சிகள்: சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஜன 12, 2024 11:13 PM

உடுமலை;உடுமலை நகராட்சியுடன், உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 14 ஊராட்சிகளை இணைக்கும் போது, அம்ரூத் - 2.0 திட்டத்தின் கீழ், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
உடுமலை நகராட்சி சிறப்புக்கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில்நேற்று நடந்தது. இதில், அரசு உத்தரவு அடிப்படையில், நகராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைந்து, நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்ய கருத்துரு தயாரித்து அனுப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, 7.41 சதுர கி.மீ., பரப்பளவில், 33 வார்டுகளுடன், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 61,150 மக்கள் தொகை உள்ளது. நகராட்சி ஆண்டு வருவாய் சராசரியாக, ரூ. 32.11 கோடியாக உள்ளது.
இதனால், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வாய்ப்புள்ளது. எனவே, அருகிலுள்ள ஊராட்சிகளான, கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, கண்ணமநாயக்கனுார், 1,2. ராகவல்பாவி,
கணபதிபாளையம், பூலாங்கிணர், குரல்குட்டை மற்றும் புக்குளம், கோட்ட மங்கலம், பொன்னேரி ஆகிய 13 ஊராட்சிகளை இணைக்கலாம்.
தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டர், சென்னை நகராட்சி நிர்வாக கமிஷனர் வாயிலாக அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பப்படவுள்ளது. இதற்கு, மன்றத்தின் அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
நகராட்சி முன்னாள் தலைவரும், 33 வார்டு கவுன்சிலருமான வேலுசாமி,'' குடிமங்கலம் ஒன்றியம், தொட்டம்பட்டி ஊராட்சியையும் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சியுடன் இணைய தொட்டம்பட்டி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், பொதுமக்கள் ஆதரவு கையெழுத்து பெற்று வழங்கியுள்ளனர். எனவே, தொட்டம்பட்டியையும் இணைக்க வேண்டும்,'' என்றார்.
நகராட்சி தலைவர்
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 14 ஊராட்சிகளையும் இணைத்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போதைய நகராட்சி மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
அருகிலுள்ள ஊராட்சிகளில், நகருக்கு இணையான அடிப்படை வசதிகள் கிடைக்கும். நகரம், கிராம வளர்ச்சி மேம்படும்.
இணைக்கப்படும் ஊராட்சிகள் மற்றும் பழைய நகராட்சி பகுதிகளில், மத்திய அரசின், அம்ரூத் - 2.0 திட்டத்தின் கீழ், குடிநீர், ரோடு, தெரு விளக்கு, பாதாள சாக்கடை என அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.
மத்திய, மாநில அரசுகள் நகர விரிவாக்கம் செய்து, அதற்கான வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி வழங்கும்.
இதனால், இணைக்கப்படும் கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் மேம்படுவதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும். அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஊராட்சிகளை தவிர புதிய ஊராட்சிகளை இணைக்க முடியாது.
இவ்வாறு, பேசினார்.