/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.1.47 லட்சம் உண்டியல் காணிக்கை
/
ரூ.1.47 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED : நவ 18, 2024 10:38 PM

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், ரூ.1.47 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், 12 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த, அக்., 10ம் தேதி இறுதியாக உண்டியல்கள் எண்ணப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு பின், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.
கோவில் செயல் அலுவலர் அமரநாதன், அறநிலையத்துறை ஆய்வர் சரவணக்குமார், அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
உண்டியல்கள் எண்ணிக்கையில், ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 483 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.