ADDED : மே 11, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாராபுரத்தில் மூலனுார் - வெள்ளகோவில் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வேனை சோதனை செய்தனர்.
1.5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில், மூலனுாரை சேர்ந்த கார்த்திகேயன், 35 என்பவர், கன்னிவாடி, மூலனுார் சுற்ற வட்டார பகுதியில் மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநிலத்தினருக்கு விற்பனை செய்வது தெரிந்தது. கார்த்திகேயனை கைது செய்து, ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.