/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெயில் அனல் பறக்குது எலுமிச்சை கிலோ ரூ.150
/
வெயில் அனல் பறக்குது எலுமிச்சை கிலோ ரூ.150
ADDED : மார் 18, 2024 12:25 AM
திருப்பூர்;கடந்த மாதம் கிலோ, 90 முதல், 110 ரூபாய்க்கு எலுமிச்சை விற்றது. ஒரு பழம், மூன்று முதல் ஐந்து ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த பத்து நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் எங்கும் மழை இல்லாமல், வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், எலுமிச்சை பயன்பாடு அதிகரித்து, விற்பனை உயர்ந்துள்ளது.
உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று கிலோ, 20 முதல், 30 ரூபாய் விலை உயர்ந்து,  130 முதல், 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில்லறை விலையில் ஒரு எலுமிச்சை பழம், நான்கு முதல் ஆறு ரூபாய் வரையும், தரமாக, பெரியதாக இருந்தால் ஏழு ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'வீட்டுக்கு தேவைக்கு ஜூஸ் தயாரிக்க வழக்கமாக வாங்குவதை விட கூடுதலாக வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் காரணமாக விற்பனை அதிகமாகியிருந்தாலும், பங்குனி மாத பிறப்பு கோவில்களில் குண்டம் திருவிழா, பூச்சாட்டு, பொங்கல், ஆண்டு விழா காரணமாக மொத்தமாக எலுமிச்சை விற்பனையாவது அதிகரித்துள்ளது. ஆகையால், விலை கூடியுள்ளது,' என்றனர்.

