/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி செலுத்தியோருக்கு ரூ.1.57 கோடி ஊக்கத் தொகை
/
சொத்து வரி செலுத்தியோருக்கு ரூ.1.57 கோடி ஊக்கத் தொகை
சொத்து வரி செலுத்தியோருக்கு ரூ.1.57 கோடி ஊக்கத் தொகை
சொத்து வரி செலுத்தியோருக்கு ரூ.1.57 கோடி ஊக்கத் தொகை
ADDED : செப் 22, 2024 05:23 AM
திருப்பூர், : உரிய காலத்தில் சொத்து வரி செலுத்திய உரிமையாளர்களுக்கு இது வரை 1.57 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக மாநகராட்சி வழங்கியுள்ளது.
நகராட்சி நிர்வாக ஆணையகம் கடந்த 23-24 ம் நிதியாண்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை, நிதியாண்டு துவக்க மாதமான ஏப்., 30 ம் தேதிக்குள்ளும், இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை, அக்., 31ம் தேதிக்குள்ளும் செலுத்தினால், வரியில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து, ஏராளமான வரி செலுத்துவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முன் வந்தனர்.
அவ்வகையில் கடந்த 2023-24ம் நிதியாண்டு மற்றும் நடப்பு 2024 -25 முதல் அரையாண்டு வரையில், 1,61,562 பேர் தங்கள் சொத்து வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு அரசு அறிவித்தபடி, 5 சதவீதம் ஊக்கத் தொகையாக, 1.57 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கூறியதாவது:மாநகராட்சி பகுதியில் உள்ள வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம் உள்ளிட்ட வரி வசூல் மையங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை வரியினங்களை செலுத்தலாம்.
இதில் நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். தற்போது வரி வசூலிப்போர் பாயின்ட் ஆப் சேல் கருவி வாயிலாகவும் வரி வசூல் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக வீடுகளில் வந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாகவும், கியுஆர் கோடு ஸ்கேன் செய்தும் வரியினங்கள் வசூலிக்கப்படுகிறது. 2வது அரையாண்டுக்கான வரியை அக்.,31ம் தேதிக்கு முன் செலுத்தி, 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.