/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே இடத்தில் 16,016 மரக்கன்றுகள்
/
ஒரே இடத்தில் 16,016 மரக்கன்றுகள்
ADDED : டிச 13, 2024 10:51 PM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரே இடத்தில், 16, 016 மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வெற்றி' அறக்கட்டளை சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாய நிலம், கோவில் நிலம், பொது இடங்களில், பயனுள்ள நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது. தண்ணீர் வசதியுள்ள நிலத்தில், பயனுள்ள மரக்கன்றுகள் நட்டு வளர்க்க தேவையான உதவி செய்யப்படுகிறது.
மூலனுார் அடுத்த கன்னிவாடி, ஆர்.ஆர்.பெரியதோட்டத்தில், இத்திட்டத்தில் அதிகபட்ச மரக்கன்றுகள் நடப்பட்டன. 'யூகலிடப்ஸ்' -15,000, சவுக்கு - 1000, சந்தனம் - 5, கொடுக்காப்புளி - 5, ஈட்டி - 2, இலுப்பை - 2, செம்மரம் -2 என, 16,016 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த, சண்முகம், சுமதி, சத்தியமூர்த்தி, அருள்வைசியா, குணசேகரன் உள்ளிட்டோர், மரக்கன்றுகள் நடவு பணியை துவக்கி வைத்தனர்.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வைக்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.