/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆந்திராவில் இருந்து கடத்தல் 17 கிலோ கஞ்சா பறிமுதல்
/
ஆந்திராவில் இருந்து கடத்தல் 17 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கடத்தல் 17 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கடத்தல் 17 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : அக் 02, 2025 11:23 PM
திருப்பூர்:திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை தொடர்பாக தனிப்படை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் ரயில், பஸ்கள் போன்றவற்றை கண்காணிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் திருப்பூர் வடக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறிய சந்தேக நபர்களை சோதனை செய்தனர். அப்போது, ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஆந்திராவை சேர்ந்த வீரபாபு, 28 என்பது தெரிந்தது. தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூருக்கு விற்பனை செய்ய கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.