/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
18 டன் ரேஷன் அரிசிலாரியுடன் பறிமுதல்
/
18 டன் ரேஷன் அரிசிலாரியுடன் பறிமுதல்
ADDED : டிச 26, 2024 11:44 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் வழியாக, கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, திருப்பூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில், எஸ்.ஐ.,கள் குப்புராஜ், பிரியதர்ஷினி ஆகியோர் வாகன சோதனை நடத்தினர்.
அதில், தாராபுரம் - எரகாம்பட்டி சோதனை சாவடி வழியாக வந்த ஒரு லாரியில், 18 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு சென்ற லாரி டிரைவர் திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த ரமேஷ், 32, கைது செய்யப்பட்டார். லாரி மற்றும் ரேஷன் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.