/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரத்தான் போட்டி: 193 பேர் பங்கேற்பு
/
மாரத்தான் போட்டி: 193 பேர் பங்கேற்பு
ADDED : நவ 02, 2025 11:26 PM

திருப்பூர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் இருந்து போட்டிகளை, ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் தலைமை வகித்தார்.
25 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில், 67 பேர், பெண்கள் பிரிவில், 41 பேர். 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஆண்கள், 53, பெண்கள், 32 பேர் என மொத்தம், 193 பேர் பங்கேற்றனர். கல்லுாரியில் துவங்கி வஞ்சிபாளையம் வரை ஆண்கள் எட்டு கி.மீ., துாரமும், பெண்கள் ஐந்து கி.மீ., துாரமும் மாரத்தானில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

