/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு பாதுகாப்பு இயக்கம் துவக்கம்
/
நல்லாறு பாதுகாப்பு இயக்கம் துவக்கம்
ADDED : நவ 02, 2025 11:26 PM

திருப்பூர்:திருமுருகன்பூண்டியில் நல்லாறு பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
அவிநாசி, திருமுருகன் பூண்டி வழியாக அமைந்துள்ளது நல்லாறு. பெயர் மட்டும் தான் நல்லாறு என்று உள்ளதே தவிர, இந்த ஆறு ஆரம்பம் முதல் கடைசி வரை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டே காணப்படுகிறது. ஆற்றை மீட்டெடுத்து, முறையாக பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்பது பலரது விருப்பம்.
இதுகுறித்த ஒத்த கருத்துடைய இயற்கை ஆர்வலர்கள் இதற்கான ஒரு அமைப்பை துவங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். முதல் நடவடிக்கையாக இந்த ஆர்வலர்களின் முதல் கலந்தாலோசனை கூட்டம் நேற்று திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், பூண்டி நகராட்சி கவுன்சிலர் குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில், நல்லாறு பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நல்லாற்றை பாதுகாத்து மீட்டெடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
---
நல்லாறு

