/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் 1.96 லட்சம் பேருக்கு 'பறந்த ' பதிவுத்தபால்
/
மாவட்டத்தில் 1.96 லட்சம் பேருக்கு 'பறந்த ' பதிவுத்தபால்
மாவட்டத்தில் 1.96 லட்சம் பேருக்கு 'பறந்த ' பதிவுத்தபால்
மாவட்டத்தில் 1.96 லட்சம் பேருக்கு 'பறந்த ' பதிவுத்தபால்
ADDED : அக் 09, 2024 12:26 AM
திருப்பூர் : இரட்டை பதிவு வாக்காளர்களை களையும் நடவடிக்கையை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், இரட்டை பதிவு தொடர்பாக, 1.96 லட்சம் பேருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் இந்திய தேர்தல் கமிஷன் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. வரும், 29ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளடக்கிய சுருக்கமுறை திருத்த பணிகள் துவங்க உள்ளன.
இது ஒரு புறமிருக்க, இரட்டை பதிவு வாக்காளரை களையெடுக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதி, மாவட்டம், மாநில அளவில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரட்டை வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களது முகவரிக்கு, 'படிவம் 'ஏ' மற்றும் உறுதி மொழி படிவம் ஆகியவை பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதியிலுள்ள மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 25 வாக்காளர் உள்ளனர். இந்நிலையில், இரட்டை பதிவு தொடர்பாக, 1.96 லட்சம் பேருக்கு, தேர்தல் பிரிவு மூலம் பதிவுத்தபால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
'டெமோகிராபிகலி சிமிலரி என்ட்ரிஸ்' (டி.எஸ்.இ.,) சிஸ்டம் முறையில், இந்திய தேர்தல் கமிஷன் இரட்டை வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளது. ஒரே பெயர், தந்தை பெயர், முகவரி, புகைப்படம் உள்ள வாக்காளர்கள், இரட்டை பதிவு வாக்காளராக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியல், மாவட்டம் வாரியாக உள்ள தேர்தல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்களிலிருந்து, இரட்டை பதிவு வாக்காளர் முகவரிக்கு, பதிவு தபால் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 1.96 லட்சம் பேருக்கு இரட்டை பதிவுக்கான தபால் அனுப்பப்பட்டுள்ளது.
வாக்காளர் தான் தொடர விரும்பும் இடத்தை, படிவம் 'ஏ'ல் டிக் செய்து, மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது உதவி தேர்தல் அலுவலகத்துக்கு தபாலிலோ, நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளரின் விருப்ப தேர்வு அடிப்படையில், கூடுதலாக உள்ள பதிவு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். தேர்தல் கமிஷன் மூலம் அனுப்பப்படும் பதிவுத்தபால் திரும்பினாலோ, தபால் கிடைத்தும் எந்த பதிலும் கிடைக்காதபட்சத்தில், அந்தந்த பி.எல்.ஓ., கள ஆய்வு நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.