/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெண்ணெய் உற்பத்தி மையத்துக்கு செங்கப்பள்ளி அருகே 2 ஏக்கர் இடம்
/
வெண்ணெய் உற்பத்தி மையத்துக்கு செங்கப்பள்ளி அருகே 2 ஏக்கர் இடம்
வெண்ணெய் உற்பத்தி மையத்துக்கு செங்கப்பள்ளி அருகே 2 ஏக்கர் இடம்
வெண்ணெய் உற்பத்தி மையத்துக்கு செங்கப்பள்ளி அருகே 2 ஏக்கர் இடம்
ADDED : அக் 12, 2025 11:26 PM
திருப்பூர்:வெண்ணெய் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், 6.50 கோடி ரூபாய் மதிப்பில், உற்பத்தி மையம் அமைக்க, இரண்டு ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி வெண்ணெய் என்பது நாடு முழுவதும் பிரசித்தி பெற்றது. எருமை மாடு வளர்ப்பு அப்பகுதியில் அதிகம்.
அதிக அளவு பால் கறக்கும் எருமைகளால், நிரந்தர வருவாய் ஈட்டி வந்தனர். படிப்படியாக, எருமைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எருமை வளர்ப்பை ஊக்குவிப்பதுடன், வெண்ணெய் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்தது. தமிழக அரசு பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அதில், ஊத்துக்குளி அருகே வெண்ணெய் உற்பத்தி மையம் அமைக்க, 6.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக,முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தொழிற்கூடங்கள் இருப்பது போல், ஒரே இடத்தில் அரசு சலுகையுடன், வெண்ணெய் உற்பத்தி மையம் அமையப்போகிறது. இதன் மூலம், குறு, சிறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், பால் எடுத்துச்சென்று வெண்ணெய் உற்பத்தி செய்யும் வாய்ப்பு உருவாகும்.
பிறகு, வெண்ணெய் உற்பத்தியில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
தமிழக பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து, வருவாய்த்துறை அலுவலர்கள், முதல்கட்டமாக நிலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முழுமையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தேவையான நிலத்தை கையகப்படுத்தினால் போதும், பணிகளை துவக்கிவிடலாம் என, அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், ''செங்கப்பள்ளி அருகே, இரண்டு ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், நிலத்தை முறையாக கையகப்படுத்தி, வெண்ணெய் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடக்கும்'' என்றனர்.