/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்
ADDED : அக் 12, 2025 11:27 PM
திருப்பூர்;தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், அதன் கீழ் உள்ள ரேஷன் கடைகளிலும் பணியாற்றும் அலுவலர் மற்றும் ஊழியர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பென்சன், பதவி உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 6ம் தேதி அனைத்து பகுதியிலும் ஆர்ப்பாட்டமும், 7ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டமும் துவங்கினர்.
கடந்த 10ம் தேதி சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடந்தது. ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டும், பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யவும் தெரிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 12ம் தேதி ஞாயிறு வார விடுமுறையாகவும் இருந்தது. இதனால், இன்று முதல் கூட்டுறவு வங்கிகள் வழக்கம் போல் இயங்கும். போராட்டம் முடிவுக்கு வந்ததால் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்.