/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 மணி 40 நிமிட நேரம் ரயில் இல்லை: முன்பதிவில்லா பயணிகள் தவிப்பு
/
2 மணி 40 நிமிட நேரம் ரயில் இல்லை: முன்பதிவில்லா பயணிகள் தவிப்பு
2 மணி 40 நிமிட நேரம் ரயில் இல்லை: முன்பதிவில்லா பயணிகள் தவிப்பு
2 மணி 40 நிமிட நேரம் ரயில் இல்லை: முன்பதிவில்லா பயணிகள் தவிப்பு
ADDED : பிப் 19, 2024 02:18 AM
திருப்பூர்:ஈரோடு - கோவை - திருப்பூர் வழித்தடத்தில், தினமும் மாலை வேளையில், 2 மணி 40 நிமிட நேரம், முன்பதிவு இல்லா டிக்கெட் பெற்ற பயணிகள் பயணிக்க முடியாத நிலை உள்ளது.
தினமும், மாலை, 5:10க்கு ஈரோட்டை கடக்கும் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் (எண்:16321) மாலை, 6:03 மணிக்கு திருப்பூரையும், இரவு, 7:30க்கு கோவையையும் சென்றடைகிறது.
இந்த ரயிலில் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் பயணிகளும் பயணம் செய்ய முடியும்.
இதை தொடர்ந்து, இந்த வழித்தடத்தை சென்னை - கோவை 'வந்தே பாரத்' சிறப்பு ரயில்; சென்னை - கோவை 'வந்தே பாரத்' தினசரி ரயில்; பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ்; மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கடக்கின்றன. இந்த ரயில்களில் பொதுப்பெட்டிகள் இல்லை; முன்பதிவு செய்தவர் மட்டுமே பயணிக்க முடியும்.
தட்கல், உடனடி முன்பதிவு என்றாலும், நான்குமே உயர்வகுப்பு ரயில்கள் என்பதால், கட்டணம் மும்முடங்காக உள்ளது.
நான்கு ரயிலும் மாலை, 6:25, 6:40 மணி. இரவு, 7:00, 7:25 மணிக்கு ஈரோட்டை கடந்து, திருப்பூர், கோவை நோக்கி பயணிக்கிறது. ஈரோட்டில் மாலை 5:10க்கு பொது பெட்டி கொண்ட நாகர்கோவில் - கோவை ரயிலை முன்பதிவு டிக்கெட் பெறாத பயணி தவற விட்டால், இரண்டு மணி 40 நிமிட நேரம் கழித்து, இரவு, 7:50க்கு வரும் சென்னை - மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் தான் பயணிக்க முடியும். இதனால், ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை வருவோர், பஸ்சை நாடுகின்றனர்.
''மாலை 5:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலான நேரத்தில், ஈரோடு - திருப்பூர் - கோவை இடையே பாசஞ்சர் ரயில் இயக்கினால், தினசரி பணி முடிந்து திரும்புவோர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் என, 5,000க்கும் அதிகமானோர் பயன்பெறுவர்'' என்கின்றனர் ரயில் பயணிகள்.

