ADDED : பிப் 18, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அருகே பைக் மீது வேன் மோதி, இருவர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூரிலிருந்து வாழைக்காய் லோடு ஏற்றிய வேன் அன்னுார் புறப்பட்டது.
கருவலுார் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தறிக்குடோன் வேலைக்கு சென்று வரும், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்டிலிங் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 39, சேகர், 40, ஆகியோர் டூவீலரில், நம்பியாம்பாளையம் சென்று கொண்டிருந்தனர்.
அனந்தகிரியில் உள்ள வளைவு பகுதியில், டூவீலர் மீது சரக்கு வேன் பலமாக மோதியதில், வேனின் பக்கவாட்டுப் பகுதியில் சிக்கிய, ஏழுமலை, சேகர் ஆகியோர் தலைநசுங்கி அதே இடத்தில் பலியாயினர்.
அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

