/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை மாத்திரை விற்ற 2 இளைஞர்கள் கைது
/
போதை மாத்திரை விற்ற 2 இளைஞர்கள் கைது
ADDED : ஜன 04, 2025 12:23 AM
அனுப்பர்பாளையம்; திருப்பூர் அருகே போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் இருந்து, திருப்பூருக்கு கூரியரில் போதை மாத்திரைகள் வருவதாக திருப்பூர் அனுப்பர் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையொட்டி, அனுப்பர்பாளையம் போலீசார் குமார் நகரில் உள்ள ஒரு கூரியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். மும்பையில் இருந்து, வந்த பார்சலில் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
அந்த பார்சல் கொங்கு மெயின் ரோடு, கொடி கம்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், 21, என்பவருக்கு வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட முகவரி சென்று அங்கு இருந்த உதயகுமார் மற்றும் அவருடன் இருந்த அஜித், 21, ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மும்பையில் இருந்து கூரியர் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி போதை பயன்பாட்டிற்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், 200 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.