/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை திருட்டு
/
தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை திருட்டு
ADDED : ஜூலை 10, 2025 11:27 PM
திருப்பூர்; திருப்பூரில், மண்பாண்ட தொழிலாளர் வீட்டில் நள்ளிரவில் நுழைந்த நபர்கள், 20 சவரன் நகையை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, ராஜ வீதியை சேர்ந்தவர் கவுதம், 29. இவர் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதன்பின், வி.ஆர்.எஸ்., பெற்று தாயுடன் சேர்ந்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் துாங்கி கொண்டிருந்தனர். கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போடவில்லை. அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள், பீரோ இருந்த அறைக்குள் சென்று, சாவி எடுத்து திறந்து, 20 சவரன் நகையை திருடி சென்றனர்.
மறுநாள் காலை நகை திருட்டு போனது குறித்து தெரிந்து தெற்கு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், சந்தேகப்படக்கூடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.