/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்கால் அருகே வீசப்பட்ட 200 கிலோ காலாவதி மாத்திரை
/
வாய்க்கால் அருகே வீசப்பட்ட 200 கிலோ காலாவதி மாத்திரை
வாய்க்கால் அருகே வீசப்பட்ட 200 கிலோ காலாவதி மாத்திரை
வாய்க்கால் அருகே வீசப்பட்ட 200 கிலோ காலாவதி மாத்திரை
ADDED : ஜூன் 09, 2025 02:06 AM

திருப்பூர்: திருப்பூர் கோவில்வழியிலிருந்து அமராவதிபாளையம் செல்லும் சாலையில், பி.ஏ.பி., கிளை வாய்க்கால் அருகே மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பாதி எரிந்த நிலையில், மருந்து கழிவுகள் குவியலாக கிடந்தன.
தகவலறிந்த மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அதிகாரிகள், கொட்டப்பட்டிருந்த மருந்துகளை பார்வையிட்டனர். சோதனையில், அவை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் இரும்புச்சத்து, போலிக் ஆசிட் உள்ளிட்ட சத்து மாத்திரைகள் என்பது தெரிய வந்தது.
மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலாவதியாகும் மருந்து, மாத்திரைகளை, மருத்துவக் கழிவுகளை கையாளும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. கொட்டப்பட்டிருந்த மாத்திரைகள் அனைத்தும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக வழங்கப்படும் சத்து மாத்திரைகள்.
கடந்த 2024ல், காலாவதியான மாத்திரைகள் 200 கிலோவை கைப்பற்றி, சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அருகில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் விசாரித்த போது, 'நாங்கள் கொட்டவில்லை' என மறுத்துவிட்டனர். இது தொடர்பான விசாரணைக்கு, சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.