/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் 20ல் பாலாலயம்
/
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் 20ல் பாலாலயம்
ADDED : ஆக 09, 2025 11:46 PM
பெருமாநல்லுார் : பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில், திருப்பணிக்காக, 20ம் தேதி பாலாலய பூஜைகள் நடைபெறுகிறது.
ஹிந்து அறநிலையத்துறை, பக்தர்கள், உபயதாரர்கள் பங்களிப்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்தரேசன், தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ் குமார் மற்றும் கோவில் முன்னாள் அறங்காவலர்கள், ஊர் பொது மக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோவிலில் மூலவர் மற்றும் விமானம் ஆகியவை தவிர இதர பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி அளித்துள்ளார். அதனையொட்டி வரும், 20ம் தேதி மாலை, 6:30 மணிக்கு பாலாலயம் செய்வது, பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்வது என முடிவு செய்யப்பட்டது.