/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் உதவி'
/
'ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் உதவி'
ADDED : ஏப் 03, 2025 05:53 AM

திருப்பூர்; ரயில்வே துறை, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், ரயிலில் பாதுகாப்பாக பயணிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
திருப்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ருவந்திகா பேசுகையில், 'ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் பிரச்னை என்றால் புகார் தெரிவிக்க ரயில்வே உதவி எண், 1512 உள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படை, 139, பெண் பயணிகள் மற்றும் குழந்தைகள் உதவி மையம், 1091 மற்றும், 1098க்கு உடனடியாக தகவல் தரலாம். உங்களுக்கு உதவ, 24 மணி நேரமும் ரயில்வே போலீசார் தொடர் கண்காணிப்பில் இருப்பர். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நீங்கள் ரயிலில் பயணிக்கலாம்,' என்றார்.

