/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரம்: 24 பேருக்கு சம்மன்
/
குப்பை விவகாரம்: 24 பேருக்கு சம்மன்
ADDED : ஜன 03, 2026 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: திருப்பூர் மாநக ராட்சி குப்பை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடு பட்ட கிராம மக்கள், 24 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
திருப்பூர் அருகே இடுவாய் அடுத்த சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சி குப்பையை கொட்டுவதற்கு எதிராக, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிந்த மங்கலம் போலீசார், 10 பேரை கைது செய்து, சேலம் மாவட்ட சிறையில் அடைத்தனர். தற்போது, 24 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

