/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் தரிசனம்
/
திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 03, 2026 06:58 AM

உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
ஆன்மிக சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தில் அபிேஷக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் செய்து வழிபடுவதே ஆருத்ரா தரிசனமாகும். இன்று சிவாலயங்களில் ஆருத்ர தரிசன வழிபாடு நடக்கிறது.
பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, டிச., 25ல் துவங்கியது. கடந்த 1ம் தேதி வரை, மாணிக்கவாசகர் சுவாமிக்கு, நாள்தோறும் அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றது.
நேற்று காலை, 10:00 மணிக்கு, சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, (3ம் தேதி) அதிகாலை, 5:00 மணிக்கு, அபிேஷகம், அலங்கார பூஜை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், நாளை இரவு, 7:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது.
இதே போல், உடுமலை பகுதியிலுள்ள ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர், கடத்துார் அர்ச்சனேஸ்வரர், கொழுமம் தாண்டேஸ்வரர், தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், இன்று அதிகாலை நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம் நடக்கிறது.

