/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; மில் உரிமையாளர், மேலாளர் கைது
/
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; மில் உரிமையாளர், மேலாளர் கைது
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; மில் உரிமையாளர், மேலாளர் கைது
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; மில் உரிமையாளர், மேலாளர் கைது
ADDED : ஏப் 15, 2025 06:20 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, அவிநாசி, ஆட்டையம்பாளையத்தில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தி, விற்பனை செய்வது குறித்து தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார், நேற்று மாலை ரைஸ் மில்லில் சோதனை செய்தனர். அப்போது, அரசால் இலவசமாக வழங்கப்படும், 24 டன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
மில் உரிமையாளர் தண்டபாணி, 72, மேலாளர் விஜயகரன், 25 என, இருவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, மில்லில் இருப்பு வைத்து, வடமாநில வாலிபர்களுக்கும் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலத்துக்கு அனுப்பி வைத்தும் அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டு, 24 டன் அரிசி, இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.