/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை
/
வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 19, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:வங்கதேசத்தை சேர்ந்த 28 பேர், எவ்வித ஆவணமும் இன்றி தமிழகம் வந்து, திருப்பூரில் பல இடங்களில் தங்கி, பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். ஜனவரி மாதம் பல்லடம் போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் பிடிபட்டனர். போலீசார், அவர்களை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட இரண்டாவது கூடுதல் கோர்ட்டில், நீதிபதி ஸ்ரீதர் விசாரித்து, வங்கதேசத்தினர் 28 பேருக்கும், இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
அரசு தரப்பில், கூடுதல் அரசு வக்கீல் பூமதி ஆஜரானார்.