/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை கணக்கெடுப்பில் 283 பேர்
/
கால்நடை கணக்கெடுப்பில் 283 பேர்
ADDED : அக் 28, 2024 05:49 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணியில், 236 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 47 மேற்பார்வையாளர்கள் ஈடுபட உள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ல், 20வது முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு, இம்மாதம் முதல் வரும் 2025 பிப்., மாதம் வரை நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து வருவாய் கிராமங்கள், நகர்ப்புறங்களில் வார்டு வாரியாக கால்நடை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
கால்நடை உள்ள மற்றும் இல்லாத வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பால் பண்ணைகள், இறைச்சி, முட்டைக்கோழி பண்ணை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
மாவட்டத்தில், 236 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 47 மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.இவர்களுக்கு, கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஏற்கனவே கள பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார், மொபைல் எண், அவர்களின் பிரதான தொழில், கல்வித் தகுதி, கால்நடைகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.