/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கதேசத்தினர் 29 பேர் திருப்பூரில் கைது
/
வங்கதேசத்தினர் 29 பேர் திருப்பூரில் கைது
ADDED : ஜன 13, 2025 06:15 AM

பல்லடம்; திருப்பூர் அருகே போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 29 பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், அருள்புரம் பகுதியில் வங்கதேசத்தினர் சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது குறித்து, கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அங்குள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த, 27 பேர் மற்றும் முருகம்பாளையத்தில் தங்கியிருந்த இருவர் என, மொத்தம் 29 பேரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கைதான அனைவரும் வங்கதேசத்தினர்; இவர்கள் எவ்வாறு சட்ட விரோதமாக இங்கு வந்தார்கள், எத்தனை நாட்களாக தங்கியுள்ளனர் என்று விசாரித்து வருகிறோம். பெரும்பாலானோர் போலி ஆதார் அட்டைகள் வைத்துள்ளனர். இதில், பெயர்கள் ஆங்கிலத்திலும், மற்ற விவரங்கள் வேறு மொழியிலும் உள்ளன. கைரேகை மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்படுவர்; கோர்ட் உத்தரவுக்கு பின், முறைப்படி வங்க தேச நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்'' என்றனர். கைதான வங்கதேசத்தினர் பெயர்கள்:
சலீம், 26, ரிடோய், 23, ரிமோன், 21, ஜிருள் அலி, 30, ஆசிக் ஹசன், 20, அஸ்ரபுல், 26, பிலா அலி, 32, கரிம் சோதர், 31, ரேபி, 21, முகமது குதுஸ், 40, முகமது ராணா, 24, முகமது ஹபில், 22, முகமது பரூக், 27, முகமது ஜோனப் அலி, 20, முகமது பிரோஸ், 21, முகமது சல்மான், 28, சோபில்குல் ரோணி, 24, சலீம், 26, அகிகுள் இஸ்லாம், 26, மோமின், 22, முகமது ஜெல்ஹாக், 23, ரோஜப் அலி, 26,பிபுல், 25, ஹசான், 23, ரோஹப், 26, முகமது சோபுஜ், 24, முகமது அசாதுல், 26, முகமது சோபுஜ், 34, அயோப், 35.