/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் வாரிய ஊழியர்கள் என கூறி ஒயர்களை திருடிய 3 பேர் கைது
/
மின் வாரிய ஊழியர்கள் என கூறி ஒயர்களை திருடிய 3 பேர் கைது
மின் வாரிய ஊழியர்கள் என கூறி ஒயர்களை திருடிய 3 பேர் கைது
மின் வாரிய ஊழியர்கள் என கூறி ஒயர்களை திருடிய 3 பேர் கைது
ADDED : மே 27, 2025 10:30 PM
திருப்பூர் : திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர் உதவி மின் பொறியாளர் அலுவலகம் அருகே உள்ள அம்மன் நகரில் தனியார் இடத்தில் மின் ஒயர் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று சரக்கு ஆட்டோவில் அங்கு வந்த, மூன்று பேர், 200 கிலோ மின் ஒயர்களை வாகனத்தில் ஏற்றி கொண்டு இருப்பதை பொதுமக்கள் பார்த்தனர். சந்தேகமடைந்த அவர்கள், மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்தினர்.
மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்ததும் மூன்று பேரும் தப்பி சென்றனர். உடன் வந்த ஆட்டோ டிரைவர் அதிர்ச்சியில் நின்றார். மூன்று பேரும் திருட்டில் ஈடுபட தன்னை பயன்படுத்தி கொண்டது அவருக்கு தெரிந்தது. மூன்று வாலிபர்களையும் பொதுமக்கள் பிடித்து திருமுருகன்பூண்டி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருப்பூர் ஸ்ரீ நகரை சேர்ந்த நந்தகுமார், 30, ஹரிகிருஷ்ணன், 27, பாபு, 29 என்பது தெரிந்தது. மூன்று பேரும் மின் ஒயர்களை திருட திட்டமிட்டனர். புதிய பஸ் ஸ்டாண்டில், தங்களை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் என, அறிமுகமாகி கொண்டு, மின் பணிக்காக, மின் ஒயர்களை எடுத்து வர வேண்டும் என ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்தனர். இதை உண்மையென நம்பி ஆட்டோ டிரைவர் வாடகைக்கு வந்தது தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.