ADDED : பிப் 02, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த, வங்கதேசத்தினர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், வேலம்பாளையம், அண்ணா வீதியில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் உரிய ஆவணங்கள் இன்றி, வங்கதேச நாட்டினர் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக, வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில், மசூத்ராணா, 26, இமாம் ஹூசைன், 18, மொஹமத்பப்லு, 26, ஆகிய மூன்று பேர் உரிய ஆவணமின்றி தங்கி இருந்தது தெரிய வந்தது. கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, போலி ஆதார் கார்டை பறிமுதல் செய்தனர்.