/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலங்கையில் உலக ஸ்கேட்டிங் போட்டி காங்கேயம் மாணவர்கள் 3 பேர் தேர்வு
/
இலங்கையில் உலக ஸ்கேட்டிங் போட்டி காங்கேயம் மாணவர்கள் 3 பேர் தேர்வு
இலங்கையில் உலக ஸ்கேட்டிங் போட்டி காங்கேயம் மாணவர்கள் 3 பேர் தேர்வு
இலங்கையில் உலக ஸ்கேட்டிங் போட்டி காங்கேயம் மாணவர்கள் 3 பேர் தேர்வு
ADDED : பிப் 10, 2024 10:36 AM
காங்கேயம்: காங்கேயத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் தஸ்வின், ஏழாம் வகுப்பு மாணவி நேஹா, மூன்றாம் வகுப்பு மாணவி சமிக்சாஸ்ரீ ஆகியோர், காங்கேயத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
மேலும் காங்கேயத்தில் தனியார் ஸ்கேட்டிங் அகடாமியில், நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர். மூவரும் மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இதையடுத்து உலக அளவிலான போட்டி, வரும் மே மாதம், இலங்கையில் நடக்கவுள்ளது.
இதற்கு மூவரும் தேர்வாகியுள்ளனர். இந்தியா மட்டுமின்றி கென்யா, மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாள், உகண்டா, இலங்கை உட்பட, 12 நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கவுள்ளனர்.