/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 ஒலிம்பிக் கனவுடன் மகள் குடிபெயர்ந்த பெற்றோர்
/
3 ஒலிம்பிக் கனவுடன் மகள் குடிபெயர்ந்த பெற்றோர்
ADDED : செப் 23, 2024 12:42 AM

உடுமலையை சேர்ந்த சுகுமார், தனது மகளின் ஒலிம்பிக் கனவை நனவாக்குவதற்காக, குடும்பத்தினரோடு திருப்பூருக்கு இடம்பெயர்ந்து, ஒர்க் ஷாப் நடத்திவருகிறார்.
சுகுமார் கூறியதாவது:
உடுமலை கொங்கல் நகர்தான் எங்கள் சொந்த ஊர். மனைவி கவிதா. மூத்த மகள் ஸ்ரீவர்தினிக்கு, சிறு வயது முதலே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள். குறிப்பாக தடை தாண்டும் ஓட்டத்தில், ஜொலிக்கவேண்டும்; ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்லவேண்டும் என்பது அவளது ஆசை. சொந்த ஊரில் போதுமான மைதானங்கள் இல்லை; பயிற்சியாளர் கிடைக்கவில்லை.
மகளின் ஒலிம்பிக் கனவை நனவாக்குவதற்காக, கடந்த 2017ல், சொந்த ஊரைவிட்டு, திருப்பூருக்கு இடம் பெயர்ந்துவிட்டோம். உடுமலையில் சொந்த வீடு உள்ளபோதும், திருப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். நான், திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில், ஒர்க் ஷாப் வைத்து நடத்திவருகிறேன்.
அழகேசன் என்ற சிறந்த பயிற்சியாளர் கிடைத்தார். அவர், எங்களைப் போலவே ஸ்ரீவர்தினியை தனது மகள் போல பாதுகாத்து, பயிற்சி அளித்துவருகிறார். ஏராளமான தடகள போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் பெற்றுள்ளார்.
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம்; பெங்களூருவில் நடைபெற்ற தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம்; பஞ்சாப்பில் நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கங்கள் பெற்றிருக்கிறார். தற்போது, ஆந்திராவில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடை தாண்டும் ஓட்டத்தில், தமிழகம் சார்பில் பங்கேற்க தற்போது தேர்வாகியுள்ளார்.
-----
பையன் படத்தை கட் செய்யவும்
-------------
சுகுமார் - கவிதா தம்பதியருடன் ஸ்ரீவர்தினி.