/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் இணைப்புக்கு லஞ்சம் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
/
மின் இணைப்புக்கு லஞ்சம் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
ADDED : பிப் 06, 2025 02:19 AM
திருப்பூர்:கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் பாபு, 53, மூன்று கடைகள் கட்டியிருந்தார். அந்த கடைகளுக்கு, மின் இணைப்பு கேட்டு, உடுமலை, மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2013ல் விண்ணப்பித்தார்.
மின் இணைப்புக்கான விண்ணப்பத்தை பரிசீலித்த, உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், 57, என்பவர், 8,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். பாபு அளித்த புகாரில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கிய முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.
கடந்த, 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கை விசாரித்த, திருப்பூர் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, முத்துகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.