/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவிழ்ந்த கார் தீப்பிடித்தது 3 இளைஞர் உயிர் தப்பினர்
/
கவிழ்ந்த கார் தீப்பிடித்தது 3 இளைஞர் உயிர் தப்பினர்
கவிழ்ந்த கார் தீப்பிடித்தது 3 இளைஞர் உயிர் தப்பினர்
கவிழ்ந்த கார் தீப்பிடித்தது 3 இளைஞர் உயிர் தப்பினர்
ADDED : மார் 22, 2025 06:48 AM

அவிநாசி : அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. அதில், பயணம் செய்த மூன்று இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர்கள் பூபதிராஜ், 26, கோகுல்ராஜ், 26 மற்றும் ஜஸ்வந்த், 25 ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். மூவரும் ஒரு காரில், கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்று நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நேற்று மீண்டும் பெருந்துறை நோக்கி, சென்று கொண்டிருந்தனர். அப்போது அவிநாசி அருகே பெருமாநல்லுார் - வள்ளிபுரம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்தது.
அதிர்ச்சியடைந்த மூவரும் உடனடியாக காரை விட்டு இறங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அருகில் இருந்தவர்கள், குன்னத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சென்ற அவிநாசி தீயணைப்பு வீரர்கள், காரில் தீயை அணைத்தனர். விபத்து குறித்து பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.