sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிமை கோர 30 நாள் அவகாசம்

/

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிமை கோர 30 நாள் அவகாசம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிமை கோர 30 நாள் அவகாசம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிமை கோர 30 நாள் அவகாசம்


ADDED : மார் 26, 2025 11:36 PM

Google News

ADDED : மார் 26, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள மாநிலம், மலப்புரத்திலுள்ள சாந்தி பன் சில்ரன்ஸ் ஹோமில், இப்ராஹிம், 16 எனும் சிறுவன், கடந்த 2022, ஏப்., 20ல் சேர்க்கப்பட்டார். குழந்தைகள் நலக்குழுவின் உத்தரவுப்படி, அதே ஆண்டு ஏப். 20 ல், வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தினரின் பராமரிப்பில் வழங்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பராமரிப்பு காலம் நிறைவடைந்த நிலையில், வளர்ப்பு, பராமரிப்பு பெற்றோர், இப்ராஹிமை தத்தெடுக்க விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல், 17 வயதான பத்ரா பேபி என்கிற சிறுமி, கடந்த 2016, மே 31ல், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் வாரியார் பவுன்டேஷனில் சேர்க்கப்பட்டார். வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் ஒரு குடும்பத்தின் பராமரிப்பில் சிறுமி வழங்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் பராமரிப்பு காலம் நிறைவடைந்த நிலையில், பராமரிப்பு பெற்றோர் பத்ரா பேபியை தத்து பெற விண்ணப்பித்துள்ளனர்.

மேற்கண்ட சிறுவன் மற்றும் சிறுமி குறித்து உரிமம் கோருபவர்கள், உரிய ஆவணங்களுடன், 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், குழந்தைக்கு சட்டப்படி பெற்றோர் இல்லை என கருதி, மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவால் தத்து கொடுப்பதற்கான தடையில்லாத சான்று வழங்கப்படும். விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை, 0421 2971198, 63826 14772 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us