/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் தடகள போட்டிகள் 300 வீரர்கள் பங்கேற்று அசத்தல்
/
அரசு கல்லுாரியில் தடகள போட்டிகள் 300 வீரர்கள் பங்கேற்று அசத்தல்
அரசு கல்லுாரியில் தடகள போட்டிகள் 300 வீரர்கள் பங்கேற்று அசத்தல்
அரசு கல்லுாரியில் தடகள போட்டிகள் 300 வீரர்கள் பங்கேற்று அசத்தல்
ADDED : பிப் 10, 2025 06:15 AM

உடுமலை : திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த, தடகள போட்டிகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
போட்டி துவக்க விழாவில், திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார்.
ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற ராதாமணி, தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்கள் முத்துச்சாமி, காசிப்பாண்டியன், கார்த்திக்பிரியா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப்பெற்றவர்களுக்கு, பதக்கம் மற்றும் சன்றிதழ் வழங்கப்பட்டது.
அதிக புள்ளிகள் பெற்ற, முதல் மூன்று அணிகளுக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. அதன்படி, ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடத்தையும், யூ.ஜி.ஏ.சி., கிளப் இரண்டாமிடத்தையும், 'ஐ வின் ட்ராக் கிளப்'., திருப்பூர் மூன்றாமிடமும் பெற்றன.
போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் தடகள சங்கத்தின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் மனோகர் செந்துார்பாண்டி, நிர்வாகி சிவசக்தி உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.