/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
300 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தயார்!
/
300 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தயார்!
ADDED : நவ 14, 2024 11:37 PM
திருப்பூர்; வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், வார்டுக்கு ஐந்து பேர் விதம், 300 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களும் 'அலார்ட்' செய்யப்பட்டு, சுகாதாரப்பணிகள் முடுக்கி விடப்பட்டது.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழை காலம் காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுக்க, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் முன்னேற்பாடு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில், 60 வார்டுகளுக்கு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தினமும் கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று அறிவுறுத்தி வருகின்றனர். இப்பணிகளை மேற்கொள்ள, வார்டுக்கு, ஐந்து பணியாளர்கள் விதம், 60 வார்டுக்கு, 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.