/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் வினாடி-வினா போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு
/
பள்ளியில் வினாடி-வினா போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு
பள்ளியில் வினாடி-வினா போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு
பள்ளியில் வினாடி-வினா போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 28, 2025 01:02 AM

உடுமலை: உடுமலை வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளியில், மாவட்டங்களுக்கு இடையிலான வினாடி-வினா போட்டி நடந்தது.
வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளி இன்ட்ராக்ட் கிளப், உடுமலை ரோட்டரி கிளப், காந்திநகர் ரோட்ரேக்ட் கிளப் மற்றும் கோவை யுனிட்டி ரோட்ரேக்ட் கிளப் சார்பில் இப்போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளுக்கு தொழிலதிபர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரோட்டரி நிர்வாகி நாகேஷ் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி நிர்வாகம் சார்பில், அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.