/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் நகரில் 31 டன் கழிவுகள் அகற்றம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் நகரில் 31 டன் கழிவுகள் அகற்றம்
மாரியம்மன் கோவில் தேரோட்டம் நகரில் 31 டன் கழிவுகள் அகற்றம்
மாரியம்மன் கோவில் தேரோட்டம் நகரில் 31 டன் கழிவுகள் அகற்றம்
ADDED : ஏப் 18, 2025 11:24 PM

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது, பொதுமக்கள் பயன்படுத்திய, 31 டன் கழிவுகள் அகற்றப்பட்டது.
உடுமலை மாரியம்மன் கோவில்தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம், திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
பொதுமக்கள் வசதிக்காக, பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சார்பில், உடுமலை நகரின் பிரதான ரோடுகளில், அன்னதானம், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான திருவிழா கடைகளும் காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நகரில் திரண்டனர்.
பொதுமக்கள் பயன்படுத்தி, வீசிச்சென்ற கழிவுகள், பிரதான ரோடுகளான பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு உள்ளிட்ட ரோடுகள் மற்றும் தேரோடும் வீதிகளில் அன்னதானம், குடிநீருக்கு பயன்படுத்திய, பாக்குத்தட்டுக்கள், உணவு கொடுத்த பிளாஸ்டிக் கலன்கள், அட்டைகள், டம்ளர்கள் என, 31 டன் கழிவுகள், துாய்மை பணியாளர்கள், கன ரக வாகனங்கள் வாயிலாக அகற்றப்பட்டது.
நகராட்சி கமிஷனர் சரவணகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர். திருவிழா நிறைவு பெறும் இன்றும், இப்பணிகள் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.