sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

"குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்'

/

"குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்'

"குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்'

"குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்'


ADDED : ஜூலை 13, 2011 10:06 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ''குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம்.

எனவே, பெண்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தைகள் பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும்,'' என கலெக்டர் மதிவாணன் பேசினார்.மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமலைசாமி பேசுகையில், ''மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்; வீட்டுக்கு ஒரு குழந்தை அவசியம்; இரண்டாவது குழந்தை ஆடம்பரம்; மூன்றாவது குழந்தை ஆபத்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், சிசு கொலையை தடுக்க வேண்டும்,'' என்றார்.கலெக்டர் மதிவாணன் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க இத்தினம் கொண்டாடவில்லை. மக்கள் தொகை அதிகரிப்பது தடுக்கப்பட்டு விட்டது. இருப்பினும், தற்போது இருப்பவர்கள் அதிகமாக உள்ளனர். இந்திய பொருளாதார வளர்ச்சியை விட, மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப, பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். அதற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. சுய உதவிக்குழுக்கள், குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கும், சுய முன்னேற்றத்துக்கும் உதவுகிறது. குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தை பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்கும்போது விழிப்புணர்வு ஏற்படும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும், பெண்கள் இருப்பார்கள் என்பது மாறி, தமிழக முதல்வரில் துவங்கி, அனைத்து இடங்களிலும் பெண்களே முன்னணி யில் உள்ளனர். கோவிலில் உள்ள விளக்கை போன்றவர்கள் பெண்கள். அவ்விளக்கு ஜோதி தரும் அளவுக்கு, குடும்பம் பிரகாசிக்கும். குடும்பம் முன்னேறினால், கிராமம் முன்னேறும்; கிராமம் முன்னேறி னால் நாடு முன்னேறும், என்றார். அதன்பின், குடும்ப நல கையேட்டை வெளியிட்டார். மக்கள் தொகை விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பழனியம்மாள் பள்ளி மாணவியர் சரண்யா, சர்மிளா, ஜெயந்தி மற்றும் குமரன் கல்லூரி மாணவியர் காமாட்சி, கோமதி, ஜீவிதா ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி, ஊரக நலப்பணிகள் மற் றும் குடும்ப நலம் (பொ) பூபதி, துணை இயக்குனர் மதியழகன், பேராசிரியர்கள், சுய உதவிக்குழுவினர், மாணவியர் பங்கேற்றனர். 25 லட்சமுங்க...! கருத்தரங்கில் மாவட்ட குடும்ப நலத்துறை வெளியிட்ட தகவல்: * திருப்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 24 லட்சத்து 71 ஆயிரத்து 222.* மாநிலத்தின் பிறப்பு விகி தம் 16 சதவீதம், திருப்பூரில் 15.1 சதவீதம் * மாநிலத்தின் இறப்பு விகிதம் 7.4, திருப்பூரில் 5.9 * மாநிலத்தின் சிசு மரண விகிதம் 31, திருப்பூரில் 21.7 * மாநிலத்தின் மகப்பேறு மரண விகிதம் 0.9, திருப்பூரில் 0.7 * மாநிலத்தின் பால் இன விகிதம் 995, திருப்பூரில் 988 * மாநிலத்தின் கல்வி விகிதம் 80.3, திருப்பூரில் 79.1 சதவீதம்.






      Dinamalar
      Follow us